டெல்லி: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த 2 நாட்களில் நகர வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்களுக்கு 12 முதல் 20 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 16, 17, 18, 19 ஆகிய 4 நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.