சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2007-ல், 50 சதவீத பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாகவும், 48 சதவீத பணியிடங்களை இடைநிலை ஆசிரியர்களாகவும், மீதமுள்ள 2 சதவீத பணியிடங்களை, பள்ளிக் கல்வித்துறையில் தகுதியான அமைச்சுப் பணியாளர்கள் மூலமாகவும் நிரப்ப, 2007-ல் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த ஆணையின்படி, 2011-ம் ஆண்டு வரை தகுதியுள்ள அமைச்சக பணியாளர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். பின்னர், அமைச்சக ஊழியர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி பரணி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.
2014-15 முதல் 2024-25 வரை 2% ஒதுக்கீட்டின் கீழ் 130 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அமைச்சுப் பணியாளர்களுக்கு. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.