10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் தவறான கேள்விக்கு மாணவர்கள் பதிலளிக்க முயன்றால் ஒரு மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. அதில், சமூக அறிவியல் விடைத்தாள் மதிப்பீடு நேற்று துவங்கியது.

இதற்கிடையில், அந்த பாடத்தின் ஒரு மதிப்பெண் வினாப் பிரிவின் 4-வது கேள்வியில், ‘அறிக்கை:- ஜோதிபா பூலே ஆதரவற்றோர் விடுதிகளையும், விதவைகளுக்கான ஆதரவற்றோர் இல்லங்களையும் திறந்தார். காரணம்: ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். இந்த கேள்வியில் இரண்டு வாக்கியங்களும் முரண்படுவதாகவும், அதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அந்த கேள்விக்கு மாணவர்கள் பதிலளிக்க முயன்றால் முழு மதிப்பெண் (ஒரு மதிப்பெண்) அளிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் ந.லதா உத்தரவிட்டுள்ளார்.