சென்னை: தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மங்களகரமான தினங்கள் எனக் கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம்.
அந்தவகையில், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.