கோவை: மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 7 பேருக்கு பொருத்தப்ட்டன.
கோயம்புத்தூர் மாநகராட்சி 73-வது வார்டு திமுக கவுன்சிலரான சந்தோஷ் என்பவரின் 8 வயது மகள் வெண்பா மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
கடந்த திங்கட்கிழமை திடீரென மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவின் காரணமாக மூளை சாவு அடைந்ததாக குடும்பத்தினர் கூறினர்.
சிறுமியின் உடல் உறுப்புகள் பெற்றோர்கள் சம்மதத்துடன் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.