சென்னை: டிசம்பர் 26, 2004 அன்று ஏற்பட்ட சுனாமியில் 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தமிழகத்திலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை நினைவு கூறும் வகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மெரினா லூப் சாலையில் தமிழ்நாடு மீனவர் சங்கம் சார்பில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆளுநர் ஆர்.என். ரவி, பொதுமக்களுடன் மவுன ஊர்வலத்தில் பங்கேற்றார். பின்னர் கடலில் பால் ஊற்றி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு மீனவர் சங்கத் தலைவர் இரா.அன்பழகனார், தமாகா பொதுச் செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ், தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன், மீனவர் சங்கச் செயலர்கள் நாக்ஸ் பெர்னாண்டோ, ஜெயக்குமார், இளைஞரணித் தலைவர் ரஞ்சித், கொள்கை பரப்புச் செயலர் சித்தார்த்தன், மகளிர் அணித் தலைவர் ஜெயந்தி சித்தார்த்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
இதில் பல்வேறு கட்சியினர் உள்பட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர், தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் ஐ.அன்பழகனார் நிருபர்களிடம் பேசுகையில், “எங்கள் துயரம் இன்னும் தீரவில்லை. உலக வரலாற்றில் தமிழகம் மட்டுமே வாழ்வாதாரத்திற்காக மீனவர்கள் கொல்லப்படும் இந்த நிலை மாற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கட்டாயம் எங்கள் வாழ்க்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.