தஞ்சாவூர்: நெய் கொள்முதல் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு குரறிவை பருவத்தில் நெல் கொள்முதல் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லை விரைவாக கொள்முதல் செய்திடவும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை விரைவாக இயக்கம் செய்திடவும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரஹாரம் மற்றும் தென்னமநாடு கொள்முதல் நிலையங்களில் நேரடியாக பார்வையிட்டார்.
மேலும் திறந்த வெளி சேமிப்பு மையங்களில் நெல் இருப்பு வைத்திட பருத்தி அப்பர் கோவில் மற்றும் சோழன் மாளிகை கிராமங்களில் உள்ள இடங்களையும் ஆய்வு செய்தார்.
மேலும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் சேமிப்பு கிடங்குகளையும் ஆய்வு செய்தார்.