சென்னை: ராமேஸ்வரம் – பாம்பன் பாலம் திறப்பு விழா ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பாலத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல திட்டமிட்டுள்ளார். பிரதமர் மதுரை வரும்போது, அவரை விமான நிலையத்தில் சந்திக்க அனுமதி கோரி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பாஜக தலைமை தன்னை சந்தித்து செங்கோட்டையனை பேச அழைத்ததால் அதிருப்தி அடைந்துள்ள பழனிசாமி, இது தொடர்பாக பிரதமரிடம் பேச பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பிரதமருடனான சந்திப்புக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றும், எப்படியாவது அனுமதி பெற வேண்டும் என்று பழனிசாமி தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.