சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 2022 டிசம்பரில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தற்போதுள்ள பார்க்கிங் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பார்க்கிங் கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கார்கள், டெம்போக்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என அனைத்துக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. உதாரணமாக 80 ரூபாயாக இருந்த கார்களுக்கான கட்டணம் தற்போது 85 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல், 24 மணி நேரத்துக்கு, 525 ரூபாயாக இருந்த கட்டணம், 550 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், மாடல் மாற்றம் போல், கடந்த ஆகஸ்ட் மாதம், திடீரென வாகனங்கள் பிக்கப் பாயின்ட் மாற்றப்பட்டதால், பயணிகள், ஓட்டுநர்கள் குழப்பம் ஏற்பட்டது. தற்போது, எவ்வித அறிவிப்பும் இன்றி இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்படுவது பயணிகளுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகளின் விளக்கத்திற்கு மாறாக, தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இந்த கட்டண உயர்வு நடத்தப்படுவதாகவும், ஒப்பந்த அடிப்படையில் 2022 வழிகாட்டுதலின்படி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கட்டண உயர்வு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.