சென்னை: புதிய ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் நெல்லை – சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் மற்றும் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் சென்னை – நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் – 12631) இரவு 8.10 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 6.40 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில், வழக்கமாக புறப்படும் நேரத்தை விட அரை மணி நேரம் தாமதமாக இரவு 8.40 மணிக்கு புறப்படும்.
ஆனால் வேகம் அதிகரிப்பதால் நெல்லை ரயில் நிலையத்திற்கு செல்லும் நேரம் மாறாமல் உள்ளது. வழக்கமாக காலை 6.40 மணிக்கு வந்து சேரும். மறு பயணத்தில் (ரயில் எண் 12632), நெல்லையில் இருந்து சென்னைக்கு இரவு 8.05 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 7 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலும் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் புறப்படும் நேரத்திற்கு பதிலாக 35 நிமிடம் தாமதமாக காலை 8.40 மணிக்கு புறப்படும்.
வழக்கம் போல் மறுநாள் காலை 7 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். பயண நேரம் குறைக்கப்பட்டு வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பயண நேரம் 30 நிமிடத்தில் இருந்து 35 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புறப்படும் நேரம் குறைக்கப்பட்டு, பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளதால், தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.