தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி கொண்டுள்ள துர்க்கை அம்மனுக்கு நேற்று ராகு கால பூஜைகள் நடைபெற்றன.
ராகுகால பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மிகவும் பிரசித்தி பெற்ற இந்த அம்மனை வழிபடுவதால் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். மேலும் துர்க்கை அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிப்பதால் அதிகளவு பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
அந்த வகையில் நேற்று நடந்த ராகுகால பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.