சென்னை: நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்காக 3 நாட்களுக்கும் மேலாக சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 4-ம் தேதி விரைவு பஸ்களின் முன்பதிவு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது. அன்று இரவு வரை கிளாம்பாக்கில் இருந்து பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் நேற்று பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
நேற்றிரவு நள்ளிரவு வரை பயணிகள் வந்துகொண்டே இருந்தனர், குறிப்பாக கிளாம்பாக்கத்தில் அவ்வப்போது வரும் பஸ்களை தட்டி சீட் எடுக்க முயன்றனர்.
நேரம் ஆக ஆக, பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, பஸ்கள் இயக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.
ஆனால், திருச்சி, தஞ்சாவூர், ஜெயங்கொண்டம் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லை எனக் கூறி பயணிகள் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர். நள்ளிரவை கடந்தும் போதிய பஸ்கள் வராததால் பயணிகள் அவதிப்பட்டனர்.