சென்னை: நாய்களை மிக அன்பாக வளர்போருக்கு 23 சதவீதம் இருதய நோய்கள் வருவது குறைவாக உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனிதர்களோடு அதிகம் பிணைப்பு கொண்ட ஒரு உயிரினமான நாய்கள் நம் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடியவை என்பது இந்த ஆய்வில் நிரூபணம் ஆகியுள்ளது.
ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த Corsin a Muller என்ற உயிரியல் ஆய்வாளர் Golden Retriever, Fox Terrier, Collies, German Shepherd போன்ற பதினோரு நாய்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.
இதன் மூலம் மனித முகம் குறித்து, அவர்கள் , அதாவது நாய்கள், எந்த விதமான எதிர்ப்பினை ஆற்றுகின்றன என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அதாவது அதன் உரிமையாளர் சிரித்தால் நாய்கள் முழு முகத்தையும் காட்டுகின்றன. ஆனால் , அதே நேரம் உரிமையாளர் கோபமாக இருந்தால் அவை முழு முகத்தை காட்டுவதில்லை. இதன் காரணமாகவே நாய்கள் தங்களின் உரிமையாளர்களின் முக உணர்ச்சிகளை குறிப்பாக முக மாற்றங்களை கண்டு கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நேரத்தில் இன்னொரு ஆய்வு முடிவு குறித்து பேசுவது அவசியமாகிறது. நாய்களை வீட்டில் வளர்த்துக்கொண்டு அதனுடன் நேரம் செலவிடாமல் இருப்பவர்களுக்கு நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
நாய்களுடன் விளையாடுவது, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்பவர்களின் உடலும் உள்ளமும் மிகவும் சுருசுருப்பாக இருப்பதுடன், அவர்களின் தேவை இல்லாத கலோரிகளும், கெட்ட கொழுப்பும் கரைகிறது.இதனால் உடல் எடை கூடுவது தடைபடுகிறது.