ராமேஸ்வரம்: நவ., 9-ல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதில் இருந்த ஜெரோம், மரிய ரொனால்டு, சரவணன், யாகோப், டைடாஸ், டென்னிஸ், ஆனந்த், அமலதீபன், சுவிதர், கிறிஸ்துராஜா, விஜய், ஜனன், லிங்கன், சர்மிஸ், சுதாஸ், மார்ஷல் டிட்டோ, தயாளன், தாமஸ் ஆரோக்கியராஜ், ஜான் பிரிட்டோ, ஜெயராஜ், சண்முகவேல், அருள், கிங்ஸ்லி ஆகிய 23 மீனவர்களை கைது செய்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் திங்கள்கிழமை நிறைவடைந்ததையடுத்து, 23 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன் அவர்களின் காவலை 2-வது முறையாக டிசம்பர் 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.