சென்னை: வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடபழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலும் ஒன்று. எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணியளவில் மர்ம நபர் ஒருவர் போன் செய்து கொலைமிரட்டல் விடுத்து அழைப்பை துண்டித்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வடபழனி காவல் நிலைய போலீஸார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களைக் கொண்டு சோதனை நடத்தச் சென்றனர். சோதனையின் முடிவில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
எனவே, வெடிகுண்டு மிரட்டல் புரளியை உருவாக்கியது உறுதியானது. இதையடுத்து வடபழனி போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வடபழனி முருகன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.