சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய வணிகப் பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சென்று திருவிழாவிற்கு தேவையான பொருட்களை வாங்க வசதியாக, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ்கள் நேற்று துவங்கியது. இதைத் தொடர்ந்து, தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு இன்று ஜன. 11, 12 ஆகிய தேதிகளில் 50 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.