சென்னை: சிறந்த திட்டங்களால் இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து பொன்முடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்ஜினியரிங் மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 22ல் துவங்குகிறது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2,53,954 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பராமரிப்பு
மாணவர்கள் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் நலனில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
உயர் கல்வி
பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட நான் முழுவன் மற்றும் புதுமைப் பெண்கள் திட்டங்களால் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறந்த திட்டங்களால் இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.