சென்னையில் நாளை ஜனவரி 3, 2025 பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும். கோவிலம்பாக்கம், அய்யப்பன்தாங்கல் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படாது.
கோவிலம்பாக்கம் பகுதியில் ராகவா நகர் (எஸ்.கொளத்தூர் மெயின் ரோடு), பால்வாடி, மேடவாக்கம் மெயின் ரோடு, கடப்பாக்கம், வைத்தியலிங்கம் நகர், ராஜீவ் நகர் 6வது தெரு, அப்பல்லோ ஓட்டல், ஸ்ரீராம் பிளாட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது. இதேபோல் அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள காட்டுப்பாக்கம், செந்தூரபுரம், ஸ்ரீநகர், விஜயலட்சுமி நகர் உள்ளிட்ட இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
பராமரிப்பு பணி காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் நிறைவடைந்தவுடன் மதியம் 2 மணிக்கு மேல் மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.