சென்னை: சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதம் 10 செ.மீ மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் கோடை வெயில் வாட்டி வதைத்துள்ள நிலையில், வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.

புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்று வீசி வருகிறது. கடந்த சில நாட்களாக கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து சென்னைவாசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் வானிலை ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பதிவை பகிர்ந்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.