சென்னை: தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது; இந்த முறை கவனமாக சிந்தித்து அமைதியான முடிவை எடுப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக கூட்டணியில் சேருவது குறித்து அதிமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, எங்களிடம் யாரும் ஆலோசனை நடத்தவில்லை, யாரிடமும் பேசவில்லை என்றார்.

மேலும், “அதிமுக-பாஜக கூட்டணி குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை, அடுத்த 6 மாதங்களுக்கு எங்கள் வளர்ச்சி பற்றி மட்டுமே சிந்திப்போம்” என்று அவர் கூறினார்.