பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். தூத்துக்குடியில் மாலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றவுள்ளார். இதனைத் தொடர்ந்து திருச்சி, கங்கைகொண்ட சோழபுரம், மற்றும் மீண்டும் டெல்லி செல்லும் பயணத்தை மேற்கொள்கிறார். மூன்று நாள் பயணத்தின் போது முக்கியமான நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள உள்ளார்.

இந்த வருகையின் முக்கிய அம்சமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை நேரில் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணியின் நிலை, எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஆகியவை முக்கியமான விவாதங்களாகும். பாஜக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணி உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், பாமகவின் நிலை இன்னும் தெளிவாகாத நிலையில், அக்கட்சியையும் கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் அக்கட்சியில் உள்ள தந்தை–மகன் மோதல் காரணமாக, அந்த முயற்சிகள் நிறைவேறாமல் உள்ளன. இந்த அரசியல் சூழ்நிலையில்தான் மோடியின் வருகை, மேலும் பல முக்கிய அரசியல் மாற்றங்களை உருவாக்கக் கூடும்.
மோடியின் பயணத்துடன் கூடிய எடப்பாடி சந்திப்பு, அடுத்த தேர்தலை முன்னிட்டு அரசியல் களத்தை வெப்பமடையச் செய்யும் முக்கியக் கட்டமாக பார்க்கப்படுகிறது. கூட்டணியின் வகை, தேர்தல் ரணதிதிகள் ஆகியவை விரைவில் தெளிவாகும் வாய்ப்பும் உண்டு.