சென்னை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையங்கள் சார்பாக கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். 8, 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏதேனும் பட்டம் பெற்ற எவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும். இந்த முகாம் மூலம் வேலை பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. முகாமுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
பங்கேற்கும் இளைஞர்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (http://www.tnprivatejobs.tn.gov.in) பதிவேற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.