நெல்லை: அனல் மின் உற்பத்திக்குப் பிறகு காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய மின் உற்பத்தி தமிழ்நாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பருவத்தில் காற்றாலை மின் உற்பத்தி மின்சார பகிர்மானக் கழகத்திற்கு உதவுகிறது. தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன.
குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. காற்றாலை மின் உற்பத்தி கடந்த 2 வாரங்களாக உச்சத்தை எட்டியுள்ளது. 19-ம் தேதி சராசரி காற்றாலை மின் உற்பத்தி 3,083 மெகாவாட்டாக இருந்தது.

நேற்று முன்தினம் இது 4,030 மெகாவாட்டாகவும், நேற்று 4,150 மெகாவாட்டாகவும் அதிகரித்தது. நேற்று மதியம் முதல் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் மின் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதால் தனியார் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.