சென்னை: ”தமிழ், போற்றுதலுக்கு உரிய பழமையான மொழி மட்டுமல்ல; பிற மொழிகளின் உதவியின்றி சுதந்திரமாக இயங்கும் பழமையான மொழி.” சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச தாய்மொழி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சமூக வலைதளங்களில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:-
“நம் மொழி பலவீனமில்லை! இலக்கியத்தில் புதைந்து கிடக்கும் வரலாற்றை தோண்டி எடுத்து நிறுவுகிறோம்! உள்ளும் புறமும் அன்போடும் துணிவோடும் வாழும் நற்றமிழரின் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமையான மொழி மட்டுமல்ல; பிற மொழிகளின் உதவியின்றி சுதந்திரமாக இயங்கும் பழமையான மொழி! நமது தனித்துவமான தொன்மையான மொழி உலகம் முழுவதும் பரவட்டும்” அவர் பதிவிட்டுள்ளார்.
மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்குமாறு மத்திய அரசு மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வரும் சூழலில், “பிற மொழிகளின் துணையின்றி சுதந்திரமாகச் செயல்படும் செம்மொழி” என்ற பெருமையை தமிழ் மொழிக்கு முதல்வர் வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.