தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வல்லம் நகர திமுக இளைஞரணி சார்பில் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 50 மாணவ, மாணவிகளுக்கு வல்லம் நகர திமுக இளைஞர் அணி சார்பில் பென்சில் பாக்ஸ், பேனா, வாட்டர் பாட்டில் உட்பட 15 பொருட்கள் மற்றும் சிறுசேமிப்பை ஊட்டி வைக்கும் வகையில் உண்டியல் ஒன்றும் சேர்த்து வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுக்குழு உறுப்பினர் திராவிட.கதிரவன் பங்கேற்றார். தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ,துணை மேயர் அஞ்சுகம்பூபதி, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் தோ.அருளானந்தசாமி, வல்லம் பேரூர் செயலாளர் டி.கே.எஸ்.ஜி..கல்யாணசுந்தரம், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், தஞ்சை மத்திய மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.செந்தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வல்லம் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.ஞானசேகர் நன்றி கூறினார்.