சென்னை: தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு, கால் மது பாட்டில்களுக்கு 60 சதவீதம் தள்ளுபடியும், 25 சதவீதம் தள்ளுபடியும், முழு மதுபாட்டில்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடியும் விற்பனை செய்யப்படுகிறது.
கூட்டம் அதிகம் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2 கவுன்டர்கள் விற்பனைக்கு திறக்கப்பட்டுள்ளன. ஆனால், போதிய இடவசதி மற்றும் பணியாளர்கள் இல்லாததால், அனைத்து கடைகளிலும் இதை செயல்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், தினமும் ரூ.2 லட்சத்துக்கு மேல் மது விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கவுன்டர்களை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் தினமும் ரூ.2 லட்சத்துக்கு மேல் மது விற்பனை செய்யும் 1,000 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த கடைகளில் கூடுதல் கவுன்டர்களை ஒரு வாரத்திற்குள் திறக்க அந்தந்த மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒரு டாஸ்மா கடையில் ஒரு மேற்பார்வையாளர் மற்றும் 2 விற்பனையாளர்கள் பணிபுரிவார்கள். தற்போது, கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டால், 2 மேற்பார்வையாளர்கள், 4 விற்பனையாளர்கள் பணியமர்த்தப்படுவர்.
மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் மதுபாட்டில்களை இருப்பு வைத்து, அதிகளவில் மது விற்பனை செய்ய, டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.