புதுக்கோட்டை: புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் துவங்கியுள்ளதால் புதுக்கோட்டையில் ஆடுகள் விற்பனை ஸ்தம்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்டு சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும்.
இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் சென்றனர். இந்த ஆட்டு சந்தையில் இன்று மட்டும் ரூ.2 கோடி வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
விரைவில் தீபாவளி பண்டிகை வருவதால், ஆட்டு சந்தைகளில் ஆடு விற்பனை அதிகரித்து, ஆட்டு இறைச்சி விலை உயர வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.