தென்னிந்திய பகுதிகளில், தாழ்வான பகுதிகளில், கிழக்கு மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் 24-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 82 டிகிரி முதல் 99 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கலாம். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 5 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறையில் 4 செ.மீ., நீலகிரி மாவட்டம் உபாசி, கோத்தகிரியில் 3 செ.மீ., ஈரோடு மாவட்டம் குண்டேரிபள்ளம், தூத்துக்குடி மாவட்டம் எழும்மங்கலம், கோவில்பட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லாறு மற்றும் பெரியநாயக்கன்பாளையம் 3 செ.மீ., மழை பதிவானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.