சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல தாழ்வு மண்டலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் பகுதி உள்ளது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 4 மற்றும் 5-ம் தேதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி பாரன்ஹீட் அதிகமாகவும், 4 மற்றும் 5-ம் தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்.

அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கிளென்மார்க்கனில் 3 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கட்டு தேன்கனிக்கோட்டையில் 2 செ.மீ., நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர், பார்வுட் மற்றும் கூடலூர் மார்க்கெட்டில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.