சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், இன்று சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 1 மற்றும் 2-ம் தேதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, ஜூலை 3-ம் தேதி ஒன்று அல்லது இரண்டு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.