சென்னை: இன்று முதல் செப்டம்பர் 4 வரை தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளதாவது:- தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் செப்டம்பர் 4 வரை ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.