தஞ்சாவூர்: தஞ்சையில் நேற்று நடந்த ராஜராஜ சோழன் சதய விழாவில் அவர் பேசியதாவது:- சதய விழா கொண்டாடப்படும் இந்த அரங்கில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. ஆனால் கூட்டம் இல்லாமல் பெரும்பாலான நாற்காலிகள் காலியாக உள்ளன. இந்த விழாவுக்கான அழைப்பிதழில் மொத்தம் 5 பக்கங்களில் பெயர் உள்ளவர்கள் மட்டும் இருந்தால், இந்த மண்டபம் நிரம்பிவிடும்.
வராதவர்களின் பெயர்களை அச்சிடுவதால் என்ன பயன் என்று தெரியவில்லை? ராஜராஜ சோழன் சதய விழாவை பெருமையாக சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது. அத்தகைய விழாவில் நேரில் கலந்து கொள்ள வேண்டும். எல்லா அரசியல்வாதிகளும் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வருவதில்லை. அரசியல் என்பது சேவை.
இச்சேவையை முறையாகச் செய்பவர்கள் மட்டுமே பெரிய கோயிலுக்குள் செல்ல முடியும். தவறு செய்பவர்களுக்கு பயம். அதனால்தான் வரத் தயங்குகிறார்கள். துணை ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மா, பெரிய கோயிலில் இருந்து வெளியேறிய பிறகுதான் ஜனாதிபதியானார். அதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.