சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாநகருக்கு உட்பட்ட சி.என்.கிராமத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி கண்ணன், தனது தாய் சாவித்திரியின் மருத்துவ செலவுக்காக சில மாதங்களுக்கு முன் காளிராஜிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார்.
கடந்த மாதம் வட்டி கட்டாததால், கண்ணன் கடுமையாக தாக்கப்பட்டு, அவரது தாய் சாவித்திரியை கொடூரமாக தாக்கி கொன்றனர். கந்துவட்டியால் தற்கொலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு கந்துவட்டித் தடைச் சட்டம் இயற்றப்பட்டது.
ஆனாலும், கந்துவட்டியை ஒழிக்க முடியவில்லை. எனவே, கடுமையான தண்டனைகளுடன் கூடிய புதிய கந்து வட்டித் தடைச் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்.
வயதான சாவித்திரியை நெல்லையில் அடித்துக் கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.