சென்னையில் மேலும் 6% சொத்து வரியை உயர்த்தி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும், சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழகத்தின் பிற பகுதிகளில் சொத்து வரியை உயர்த்தும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சொத்து வரியை 6% உயர்த்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து அனைத்து நகர்ப்புறங்களிலும் சொத்து வரி மேலும் 6% உயர்த்தப்படும்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள், மக்களை பாதிக்கும் வகையில், ஏற்கனவே, 2022ல், தமிழகம் முழுவதும், 150 சதவீதம் வரை, சொத்து வரியை உயர்த்தி உள்ளது , மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் வீட்டு உரிமையாளர்கள் மட்டுமின்றி, வாடகைதாரர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.
மக்களுக்கு நல்லாட்சி தருவதாக கூறி வெற்றி பெற்ற திமுக அரசு, வரி, கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது அடுத்தடுத்து சுமையை சுமத்தி வருகிறது. மக்களை முட்டாள்தனமாக நினைத்து அவர்கள் மீது இத்தகைய சுமையை திணிப்பது அனுமதிக்கப்படாது. தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களித்ததை தவிர எந்த பாவமும் செய்யவில்லை. அதற்கு இவ்வளவு கடுமையான தண்டனை தேவையில்லை.