மதுரை: சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடப்பது போல் ஆந்திர மாநிலம் அரக்குவேலி மற்றும் தமிழகம் கோவை பொள்ளாச்சியிலும் பலூன் திருவிழா நடக்கிறது. பொள்ளாச்சியில் 2015-ம் ஆண்டு முதல் நடந்து வரும் பலூன் திருவிழாவில் கடந்த ஆண்டு 11 நாடுகள் பங்கேற்றன.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று பலூன் திருவிழாவை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் பலூன் திருவிழா அலங்காநல்லூர் அருகே உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற உள்ளது.
பொங்கலையொட்டி ஏறுதழுவுதல் மண்டபத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுடன் ஜனவரி 3-வது வாரத்தில் விழாவும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.