சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடப்படுவதால் ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு 10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு பரிந்துரை செய்துள்ளது.
நாகர்கோவில் – தாம்பரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (06012) ஞாயிற்றுக்கிழமைகளில் டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 2, 2025 வரை 10 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. வாராந்திர விரைவு ரயில் (06011) திங்கட்கிழமைகளில் மறுமார்கத்தில் டிசம்பர் 2 முதல் பிப்ரவரி 3 வரை 10 சேவைகள் இயக்கப்படுகிறது.
திருநெல்வேலி – சென்னை எழும்பூர் (06070/ 06069), திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் (06030/ 06029) மற்றும் தாம்பரம் – கோவை (06184/ 06185) ஆகிய இரு வழித்தடங்களிலும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள். தாம்பரம் – ராமநாதபுரம் இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் விரைவு ரயில்களின் (06103/ 06104) சேவைக் காலத்தை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.