சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் மத பயங்கரவாதம் எங்கு உள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் மத பயங்கரவாதம் எங்கு உள்ளது என்று சொல்லுங்கள்.. பொதுவா சொல்லக்கூடாது.

கோவை கோவில் அருகே நடந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். பிரதமர் மோடி இன்னும் மணிப்பூருக்கு செல்லவில்லை. மதவாதம் தமிழகத்தில் நுழையவே முடியாது” என்றார்.