நாகை: நாகை மாவட்டம் சிக்கல் நவநீதேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2.30 கோடி மதிப்பிலான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறையினர் அகற்றி இடத்தை மீட்டனர்.
நாகை அருகே சிக்கல் நவநீதேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான இடத்தை அறநிலையத்துறையினர் மீட்டனர்.
கோயில் பணியாளர் குடியிருப்புகளை தனி நபர்கள் ஆக்கிரமித்திருந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் வீட்டில் உள்ள பொருட்களை வெளியே எடுத்து வைத்து சுமார் 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.