சென்னை: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த மே 25-ம் தேதி அக்கட்சி நிர்வாகியின் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக நெல்லையில் உள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கினார். அங்கு கால் இடறி விழுந்ததில் வைகோவுக்கு இடது தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.
சென்னை திரும்பிய அவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இடது தோளில் மூன்று எலும்புகள் உடைந்தன. அதை சரிசெய்ய கடந்த 29-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு டைட்டானியம் தட்டு வைக்கப்பட்டது. சில நாட்களாக வீட்டில் ஓய்வில் இருந்த வைகோ, பின்னர் கட்சி நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
இந்நிலையில் நேற்று இரவு வைகோ தோளில் வைக்கப்பட்டிருந்த பிளேட்டை அகற்றுவதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த பிறகு, மருத்துவர்கள் தகடுகளை அகற்றினர். நேற்று வீடு திரும்பினார்.