திருவொற்றியூர்: சென்னை மணலி பல்ஜிபாளையம் பகுதியில் மாநகராட்சி மற்றும் பொது தனியார் கூட்டமைப்பு இணைந்து பயோ காஸ் தயாரிப்பு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அதில் இருந்து உயிர்வாயு உற்பத்தி செய்யப்பட்டு, குழாய்கள் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் நுழைவு வாயிலில் கழிவுநீர் தேங்கி, சேறும், சகதியுமாக இருப்பதால், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், கொசுத்தொல்லை அதிகளவில் ஏற்பட்டு, இரவில் தூங்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள், கழிவுநீரை அகற்றி, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், “”பயோகாஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், சாலையோரங்களில் தேங்கி கிடப்பதால், மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்.