நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர் சங்க பேரமைப்பு 24 மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தது. அதன் ஆதரவாக இன்று அனைத்து கடைகளும், உணவகங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் செயல்படவில்லை. இதனால் நகர் பகுதி வெறிச்சோடியாக மாறியது.
நீலகிரியில் இ பாஸ் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த உத்தரவின்படி, வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வணிகர் சங்கப் பேரமைப்பு தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து 24 மணி நேர முழு அடைப்பிற்கான அழைப்பை விடுத்துள்ளது.
இன்று காலை உதகை, குன்னூர், காததகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் செயல்படவில்லை. இதனால் நகர் பகுதிகள் வெறிச்சோடியாக மாறியுள்ளன. சுற்றுலா பயணிகள் இதனால் கடும் அவதியில் இருந்து வருகின்றனர்.
இந்த முழு அடைப்பு போராட்டம், இ பாஸ் நடைமுறையின் எதிர்ப்புக்கு மேலும் வலுப்படுத்தப்பட்டது.