தமிழகத்தில் 2022-23ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பைத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கான விவரங்களை EMIS (எடுகேஷன் மேனேஜ்மெண்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 5,16,135 மாணவர்கள் மீது 4,64,684 மாணவர்களுக்கு முதல் கட்டமாக ரூ.5,000 வழங்கப்படவுள்ளது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி, விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய கடைசி நாளாகக் கூறப்பட்டுள்ளது. 59,283 மாணவர்களின் விவரங்கள் மட்டும் சரியானதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மீதமுள்ள 4,05,401 மாணவர்களின் விவரங்கள் தவறானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான விவரங்களை உடனடியாக பதிவேற்றம் செய்தல் அவசியமாக உள்ளது. இந்தத் தகவல்களை பதிவு செய்தவுடன், அடுத்த சில வாரங்களில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.