சென்னை: தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனர்களுக்கான ஒரு நாள் சாட்ஜிபிடி பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் 19-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. சாட்ஜிபிடி மூலம் வணிகச் செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், திறன்களை மேம்படுத்தவும் இந்தப் பயிற்சி உதவும்.
அதன்படி, தொழில்முனைவோரின் சவால்களை எதிர்கொள்ளும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன, அதாவது வணிகத் தேவைகளுக்காக சாட்ஜிபிடி அறிவுறுத்தல்களை எழுதுதல், சாட்ஜிபிடிஐப் பயன்படுத்தி புதுமையான சந்தைப்படுத்தல் உத்திகளைத் திட்டமிடுதல், வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் வணிக செயல்திறனை துல்லியமாக கண்காணிக்க சாட்ஜிபிடிஐப் பயன்படுத்துதல்.
பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள நபர்கள் www.editn.in என்ற இணையதளத்திற்குச் சென்று 9080609808 மற்றும் 9841693060 என்ற அலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து பங்கேற்கலாம். பங்கேற்பாளர்கள் 100க்கும் மேற்பட்ட சாட்ஜிபிடி அறிவுறுத்தல்கள் மற்றும் பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் WhatsApp சமூகத்தை அணுகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.