கரூர்: நீதிமன்றத்தில் சரணடைந்தார் … கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக போலீசார் தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் அணிவகுத்து வந்தன. அப்போது கட்சி தொண்டர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞரின் கார் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேலத்தைச் சேர்ந்த தவெக உறுப்பினர் மணிகண்டன் இன்று கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜராகி முன்ஜாமின் கேட்டு மனு அளித்துள்ளார். தொடர்ந்து கரூர் நகர போலீசார் ஆம்புலன்சை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், மேலும் சில பிரிவுகளை சேர்த்து மணிகண்டனுக்கு நீதிமன்ற காவல் கேட்டு மனு அளித்துள்ளனர்.