சென்னை: தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. அதேபோல் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் நாளை நிறைவடைகிறது.

கடைசி நாளில் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இவர்களுக்கான கோடை விடுமுறை, ஏப்., 25-ல் துவங்குகிறது. ஆனால், விடைத்தாள் மதிப்பீடு, மாணவர் சேர்க்கை போன்ற நிர்வாக பணிகளை கவனிக்க, பள்ளியின் கடைசி வேலை நாளான, ஏப்., 30-ம் தேதி வரை, பணிக்கு வருமாறு, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2025-26-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும். எனவே அன்றைய தினம் பள்ளிகளைத் திறக்க பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னேற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.