சென்னையில் கார் பந்தயம் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய, மாநில அரசுகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார். சென்னையில் கார் ரேஸ் நடத்தினால் முதலீட்டுக்கு லாபம் கிடைக்குமா, தொழில் முதலீடுகளுக்காக அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார்.
அம்பேத்கரும், தமிழைத் தாய் மொழியாகப் பேசும் மக்கள் இந்தியாவெங்கும் வாழ்கிறார்கள் என்றும், தெற்காசிய நாடுகளில் வாழும் மக்கள் தமிழர்கள் என்றும், பிறர் வந்து புலம் பெயர்ந்தவர்கள் என்றும் சீமான் ஆவேசமாகப் பேசினார்.
தேங்காய் சில்லுக்கு விருப்பப்படுபவர்கள் தாங்கள் இல்லை என்றும் தங்களுடையதுதான் தேங்காய்யே என்றும் கூறிய சீமான், பாசிஸ்ட் பிரிவினைவாதி என்று தன்னை நோக்கி கூறும்போது பெருமைதான் உண்டாகிறது என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசியத்தின் எழுச்சி திராவிடம் மற்றும் இந்திய தேசியம் செல்லாக்காசாகி விடும் என்று அவர் எச்சரித்தார்.