மதுரை: மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பொருள் பாப்கார்ன். ஏழை மக்கள் வாங்குகிறார்கள். ஜிஎஸ்டி வரியை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது.
இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அபரிமிதமான வருவாய் வருகிறது என்கிறார்கள். இதற்கெல்லாம் வரி விதிக்க வேண்டுமா? இவ்வாறு அவர் கூறினார். பின்னர், “எம்ஜிஆருக்கும், பிரதமர் மோடிக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், உங்களை கூட்டணிக்கு அழைக்கிறாரா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு அவர், “எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது.
அவரைப் போல் யாரும் பிறக்க முடியாது. அதிமுக அழியாமல் இருக்க பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே, அதிமுக தனித்து வெற்றி பெறும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மாற்றுக் கட்சிகளின் கருத்துக்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி.தினகரன் இணைவது குறித்து எடப்பாடி முடிவெடுப்பார்.