புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்தை சீரமைக்க ரூ.2 கோடி செலவில் 84 இடங்களில் சூரிய சக்தியில் இயங்கும் டிஜிட்டல் சிக்னல்கள் அமைக்கப்படுகிறது.
இப்பணிகள் நிறைவடைந்து சிக்னல்கள் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், சிக்னல்களை கையாள்வது குறித்த போக்குவரத்து காவலர்களுக்கான பயிற்சி முகாம் புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை மைதான வளாகத்தில் இன்று நடைபெற்றது.
முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் திரிபாதி தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை சிக்னல்களை பயன்படுத்தி உறுதி செய்ய வேண்டும் என விளக்கப்பட்டது. மேலும், சிக்னல்களை பராமரிக்க பத்து வழிகள் உள்ளன.
இந்த பயிற்சி கூடத்தில் இந்த 10 நடைமுறைகளில் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து, சிக்னல்களை திறம்பட கையாண்ட 4 காவலர்களுக்கு பிரவீன் குமார் திரிபாதி ரூ.500 ரொக்கப் பரிசு வழங்கினார்.