சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2 புதிய நவீன தீயணைப்பு வாகனங்களும், நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 4 புதிய ஆம்புலன்ஸ்களும் பெறப்பட்டுள்ளன. சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் கொடியேற்றினார். இதன் மூலம் விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்களின் எண்ணிக்கை 9 ஆகவும், ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 6 ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தை ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் புதிதாக 4 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் 2 புதிய நவீன தீயணைப்பு வாகனங்களும், நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 4 புதிய ஆம்புலன்ஸ்களும் பெறப்பட்டுள்ளன.