சென்னை: அழகர் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:- அழகர் பண்டிகையை முன்னிட்டு பலர் மதுரைக்குச் செல்வார்கள். இதனால் ரயிலில் நெரிசல் ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு, இன்று இரவு 11.30 மணிக்கு தாம்பரம்-மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 7.55 மணிக்கு மதுரையை அடையும். எதிர் திசையில், 12-ம் தேதி இரவு 11.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 13-ம் தேதி காலை 7.50 மணிக்கு தாம்பரத்தை அடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.